tamilnadu

img

திருமூர்த்தி அணையில் இருக்கும் பழைமையான சிலைகளை பாதுகாக்கப்படுமா!

உடுமலை, செப். 20- திருமூர்த்தி அணையில் உள்ள பழைமையான சிலைகள் கேட்பார் இல்லாமல் சிதைத்து கிடைப்பதை பாதுகாக்க  சமுக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை யிலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது திரு மூர்த்தி அணை.  பல ஆண்டு களுக்கு பிறகு திருமூர்த்தி அணையை தூர்வாரும்  நடவடிக்கையால் அணையில் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த கற்சிலைகள் கிடைத்துள்ளன. இந்த கற்சிலை களை  பாதுகாக்காமல் அணையில் ஓரத்தில் வீசி செல்லப்பட்டுள்ளது. இந்த செயல் அப்பகுதி மக்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்திவுள்ளது.  இது குறித்து அப்பகுதி மக்க ளிடம் கேட்ட போது, தற்போது திருமூர்த்தி அணை உள்ள பகுதி யானது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தளி பகுதியை மையமாகக் கொண்டு பாளையக்காரர்கள் ஆட்சி செய்து வந்துள்ளார்கள். அதற்கான பல்வேறு ஆதாரங் கள்  இப்பகுதியில் உள்ளது.  அணையில் கிடைத்த கற்சிலை கள் இதற்கு மேலும் வலு சேர்க் கும் வகையில் உள்ளது. மேலும் ஏற்கனவே இப்பகுதியில் கிடைத்த பல்வேறு சிலைகளை திருமூர்த்தி மலை அரசினர் விடுதி முன்பாக வைத்துள்ளார்கள். அதே போல் இந்த சிலைகளையும் அங்கு வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் தூர்வாரும் பணியின் போது கிடைக்கும் அனைத்து வரலாற்று சின்னங்களையும் முறையாக பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  திருப்பூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் திருமூர்த்திமலையில் வீரத்துடன் வெள்ளையர்களை எதிர்த்த எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் கட்டி, இப்பகுதி யில் இருக்கும் அனைத்து வர லாற்று ஆவணங்களையும் வைக்க வேண்டும். இதன் மூலம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பழைய வாலாற்றை அறிய வழி வகை செய்ய உதவும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப் பாக உள்ளது.  (ந.நி)