tamilnadu

img

தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் தயார் கோவை மாவட்ட ஆட்சியர் பேட்டி

கோவை, ஏப்.17 – கோவை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளதாகவும், தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கு.ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வியாழனன்று நடைபெற உள்ளநிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட், மை, எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் துணைராணுவ படையினர் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பொருட்கள்அனுப்பும் பணிகளை புதனன்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பார்வையிட்டார்.இதையடுத்து, செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர்கு.


ராசாமணி கூறுகையில், கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து70 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில்,470 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாகமைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டுள்ளது. 1,880 வாக்கு சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளன.மேலும், வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்கள், வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் புதன்கிழமை மாலைக்குள் நிறைவடையும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மாற்று திறனாளிகளுக்கு உதவதன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க டோக்கன் வசதி செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில்பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்ய 20 சதவிகித கூடுதல்இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் இருக்கின்றனர். தேர்தல் சுதந்திரமாகவும்,நேர்மையாகவும் நடக்க அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் தமிழகம் - கேரளா எல்லைப்பகுதியில் உள்ள 16 சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

;