சோர்வடைந்த மாணவர்கள்
அவிநாசி, ஆக. 18- அவிநாசி அடுத்து ராக்கியா பாளையத்தில் அரசு பள்ளியில் வகுப்பறை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசி ஒன்றியம் திருமுரு கன்பூண்டி பேரூராட்சிக்கு உட் பட்ட ராக்கியாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள் ள்ளது. இப்பள்ளியில் அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை பள்ளி மாணவர்களை காலை 9.30 மணி அளவில் அழைத்து அமர வைத்து இருந் தனர். நிகழ்ச்சி 10 மணிக்கு துவங் கும் என கூறப்பட்டிருந்த நிலை யில், அவிநாசி சட்டமன்ற உறுப் பினரும் தமிழகத்தினுடைய சபாநாயகருமான ப.தனபால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமத மாக வந்தார். இதையடுத்து நிகழ்ச்சியை துவங்கும்போது மின்சார இணைப்பு தடைபட்டது. இதைத் தொடர்ந்து மின்சாரம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச் சியை துவங்கும்போது ஒலி பெருக்கி வேலை செய்யவில்லை. இதனால், நிகழ்ச்சி தொடங்க மேலும் தாமதமானது. மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அலு வலர்கள் உள்ளிட்ட அரசு அதி காரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், விடுமுறை தினத் தில் மாணவ, மாணவிகளும் அழைக்கப்பட்டது அனைவரிட மும் அதிருப்தியை ஏற்படுத்தியது.