tamilnadu

அங்கன்வாடி கட்டிடத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி

ஈரோடு, ஜூலை 12- ஈரோடு மாநகராட்சியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 3வது வார்டுக்குட்பட்ட மாதேஸ்வரன் நகரில் தனியார் இடத்தின் கீற்று கொட்டகை யில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது. கடந்த 2017 ல் இங்கு பணி செய்த ஆசிரியை இறந்ததால், இவருக்குப்பின் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. அங்கன்வாடி மைய பணி யாளர் அங்கு வரும் 32 குழந்தைகளை கவனிக்கிறார். அவ ரே, குழந்தைகளை கவனித்துக்கொண்டு, சமையல் செய்து, பாடம் கற்பிக்கும் பணியும் செய்வதால், சிரமம் ஏற்படு வதுடன், குழந்தைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி யாகிறது. மேலும், அங்கு போதுமான குடிநீர், கழிப்பிடம் பயன் பாட்டிற்கான தண்ணீர் இல்லை. இதே பகுதியில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அதிக அளவில் உள்ளது. அங்கு விலாசமான, பாதுகாப்புடன் கூடிய சொந்த கட்ட டத்தை, அரசு கட்டிக்கொடுக்க வேண்டும், ஆசிரியர் நியமித்து, தேவையான அடிப்படை வசிதிகள் செய்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனை சந்தித்து அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். மேலும், புதிய கட்டடம் கட்டும் வரை, மையத்திற்கு குழந் தைகள் பாதுகாப்பாக வந்து செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.