tamilnadu

கோவை, நீலகிரி, ஈரோடு முக்கிய செய்திகள்

கோவையிலும் நீட்தேர்வு ஆள்மாறாட்டம்?
கோவை, செப். 26- தேனி மருத்துவக் கல்லூரியில் நீட்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்ட விசாரணை யில், உதித்சூர்யா ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்து வக் கல்லூரிகளிலும் ஆவணங்களை சரிபார்க்க மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டி ருந்தது. இதனையடுத்து, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் மாணவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. இதில், ஒரு மாணவர் மற்றும் மாணவி ஒருவரின் புகைப்படத்தில் வித்தியாசம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சம்ப வம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக மருத்துவக் கல்லூரி இயக்குன ரகத்திற்கு தகவல் கொடுத்தது. இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், இது குறித்து கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் செய்தி யாளர் சந்திப்பில் கூறுகையில், தேனி சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் மருத்துவ இயக்குனரகத்தில் இருந்து எங்களுக்கு வந்த உத்தர வையடுத்து, அரசு உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட 150 மாணவர்களின் அனைத்து விதமான சான்றி தழ்களையும் சரி பார்த்தோம். அதில் இருவரது புகைப் படங்களில் மாறுபாடு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளதது. நீட் அட்மிட் கார்டில் இருப்பவர் புகைப்படமும், தேர்வுக்குழு வழங்கிய அட்மிட் கார்டில் இருந்த புகைப்படமும் மாறுபட்டு இருப்ப தாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இருவரது பெற்றோரையும் அழைத்துப் பேசி உள்ளோம். அவர்கள் இரண்டு இடத்தில் உள்ள புகைப்படமும் ஒருவருடையதுதான் என்று தெரிவித்துள்ளார்கள்.  இருப்பினும் இதில் முறைகேடு நடைபெற்று இருக்கிறதா இல்லையா என தேர்வுக்குழு தான் நிரூபிக்க வேண்டும். தேர்வுக்குழுவிடம் உள்ள மாண வர்களின் கைரேகைகளைக் கொண்டு சரி பார்க்க மாணவர்கள் இருவரும் சென்னை அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். தவறு நடந்திருந்தால் மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் தான் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் அனுப்பிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக்கொண்டது மட்டும் தான் எங்கள் வேலை என தெரிவித்தார்.

கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
நீலகிரி, செப்.26- நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் கேத்தியில் ரூ.15 லட்சம்  மதிப்பில் தடுப்புச் சுவர் மற்றும் சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒடய ரட்டி பகுதியில் ரூ.1.5 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர்  கட்டப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.1 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் தேனலை பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக ரூ. 25.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சி யர் ஜெ.இன்னசென்ட் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். இதன்பின்னர் துறை அலுவலர் களிடம் பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு உத்த ரவிட்டார். இந்த ஆய்வில் குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மரு.ஜெயராமன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் மனோரஞ்சிதம், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், ராமன், குன்னூர் வட்டாட்சியர் தினேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா இருசக்கர வாகனம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
ஈரோடு, செப்.26- அம்மா இரு சக்கர வாகனம் கேட்டு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 50 சதவிகித மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முற்றிலும் பெண்களுக்கான திட்டமாகும். இதில் வாகனத்தின் விலையில் 50 சதவிகிதம் அல்லது ரூ.25 ஆயிரம் ஆகியவற்றில் எது குறைவோ அந்த தொகை அரசு மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஸ்கூட்டரை வாங்க தமிழ கத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது தவறியவராக இருக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறு தொழில் செய்பவராக இருக்கலாம். தொலைதூரம், மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், பெண்களை குடும்ப தலைவராக கொண்டவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை கடந்த திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 1-1-2018 தேதி பிறகு தயார் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே திட்டம் பொருந்தும். எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த உழைக் கும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். என மாவட்ட ஆட் சியர் தெரிவித்து உள்ளார்.