கோவை, மே 9-கோவை காந்திபுரம் கிராஸ்கட் பகுதியில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சாலையோரத்தில் கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர், காவல்துறையினர் குழந்தையை மீட்டு கோவைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள்குழந்தையை பராமரித்து வந்தனர்.இந்நிலையில் தற்போது குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனையின் ஆர்எம்ஓ சவுந்திரவேல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார். அவர்கள்,குழந்தையை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள காப்பகத்தில் புதனன்று ஒப்படைத்தனர்.மேலும், குழந்தையின் தாய் இது தனது குழந்தை என்றஆதாரத்தை காண்பித்தால் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்படும் எனவும், இல்லையென்றால் தொடர்ந்து குழந்தை காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.