திருப்பூர், நவ. 11- கோவை வேளாண் பல்கலைக் கழக இறுதி யாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவர்கள், பொங்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் கிராமப்புறத் திட்டத்தின் கீழ் களப் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வியாழ னன்று தென்னை டானிக் செயல்முறை விளக்கத்தை இம்மாணவர்கள் காட்டூர் விவசாய மக்களுக்கு செய்து காட்டினர். காட்டூரில் சிறு விவசாயி கந்தசாமி, தனது தோட்டத் தில் 20 வருட காலமாக 400 தென்னை மரங் களை பராமரித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக மாணவர்கள் அப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டு தென்னை பயிரிடும் முறைகளையும், அதில் ஏற்படும் பெரும்பான்மை பிரச்சனைகளை பற்றியும் விவரங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து தேங்காய் எண் ணிக்கையை அதிகரிக்கவும், உருவ அளவை பெரியதாக்கவும், மொட்டு தேங் காய் உதிர்வதை தடுக்கும் நோக்கத்தோடு தென்னை டானிக் செயல்முறை விளக் கத்தை விவசாயிகளுக்கு செய்து காட்டி, தென்னை டானிக் பயன்படுத்துவதன் பயன்களையும், இதனை பெறுவதற்கான வழிமுறைகளையும் விளக்கினர்.