tamilnadu

img

கல்லூரிகளில் கட்டண உயர்வை ரத்து செய்திடுக

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

கோவை, அக்.10- பாரதியார் பல்கலைக் கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று பாரதியார் பல்கலைக் கழ கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. பாரதியார் பல்கலைக் கழகம் அண் மையில் தேர்வு கட்டணம், விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு உயர்த் தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜ் தலைமையில் பாரதியார் பல்கலைக் கழக வாயிலை முற்றுகையிட்டு கட்டண உயர்விற்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசார், மாநில செயற் குழு உறுப்பினர் காவ்யா ஆகியோர் பல் கலைக் கழக பதிவாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.