tamilnadu

img

ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்குறுதி

கோவை, ஏப்.5-

சூலூர் ஒன்றிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பி. ஆர். நடராஜன் தெரிவித்தார். 17 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவர் வெள்ளியன்று சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுக சொத்துபாதுகாப்புக் குழு துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமி, சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் வி.எம்.சி. மனோகரன், சிவகுமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய செயலாளர் கிரி, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மௌனசாமி, தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்தகுமார், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, ஜி.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, சூலூர் ஒன்றிய செயலாளர் எம்.ஆறுமுகம்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் வேட்பாளர் பி. ஆர்.நடராஜன் பேசுகையில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுகிற வகையில் ஆனைமலை -நல்லாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


கடந்த 2009-14ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சுமார் 10 கோடி ரூபாய் செலவில் இப்பகுதியில் 34 சமுதாயக் கூடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது . அதுபோல் மீண்டும் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் இப்பகுதி மக்களுடைய தேவையைமுழுமையாக அறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்ற வாக்குறுதி அளித்தார்.மேலும் அவர் பேசுகையில், விவசாய விளை நிலங்களில் மின்உயர்மின் கோபுரங்கள் அமைக்கும்பணிகள் தடுத்து நிறுத்தப்படும். கள்ளப்பாளையம் ஊராட்சி பகுதியில் ஏற்கனவே துவங்கப்பட்டு செயல்படாமல் உள்ள தொழிற்பேட்டையை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பொங்கலூர் ந.பழனிசாமி இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந.பழனிசாமி பேசுகையில், மோடி அரசாங்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புஆட்சிக்கு வரும்போது ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் என்றவாக்குறுதியை அளித்தார். ஆனால்,இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து மோடி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களிடம் கேட்கையில், நாங்கள் பொய்யான வாக்குறுதியை தான் கொடுத்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றனர். இப்படி பொய் கூறுகிற பாஜகவிற்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும். எனவே அந்த கூட்டணியை புறந்தள்ளிவிட்டு மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிக்க வேண்டுமாறு அவர் வாக்காளர்களு கோரிக்கை விடுத்தார்.

;