ஓசூர், ஜூலை 17- ஓசூர் 8ஆவது புத்தகத் திருவிழாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. மனோகரன் திறந்து வைத்தார். தலைவர் துரை தலைமை தாங்கினார். ஒருங்கி ணைப்பாளர் சிவக்குமார் அறிமுக உரை யாற்றினர். செயலாளர் பாலகிருஷ்ணன் புத்தகத் திருவிழா குறித்து விளக்கினார். கலை நிகழ்ச்சிகள், தப்பாட்டம். நடை பெற்றது. தமுஎகசவின் எழுத்தாளர் பா.வெங்கடே சனுக்கு ஓசூர் படைப்பாளி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் கமலாலயன் புத்தகவாசிப்பு குறித்து பேசினார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் “என்னை புரட்டிய புத்த கங்கள் “ எனும் தலைப்பில் பேசினார். புத்த கங்களை நீங்கள் புரட்டினால் அது உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும். புத்தங் களை நெஞ்சில் அனைத்துக் கொண்டால் அது குழந்தைகளைப் போல ஆனந்தம் தரக்கூடியது. புத்தகங்கள் படிக்க படிக்க புத்தாக்கம் பெறுவோம் என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் சேதுராமன், பொருளாளர் சுப்பிர மணியம், விழா பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் சீனிவாசலு, நிர்வாகிகள் அரிச்சந்திரன், வனவேந்தன், காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஜய பாஸ்கர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் சுப்பிரமணி, துணைச் செயலாளர் பவானி, தமுஎகச மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், வீட்டுக்கொரு நூலக முனைப்பாளர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.