tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019

இன்றைய ஆட்டங்கள்

           

       பாகிஸ்தான்    -ஆப்கானிஸ்தான்

இடம் : லீட்ஸ் 
நேரம் : பிற்பகல் 3 மணி

         வெற்றி   70%     -    30%  வாய்ப்பு

இரு அணிகளையும் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் அணி சற்று பலமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால் அந்த அணிக்கு இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால் அரையிறுதி வைய்ப்பு பிரகாசமாகும் என்பதால் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் சாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

        நியூஸிலாந்து     - ஆஸ்திரேலியா

இடம் : லார்ட்ஸ் (லண்டன்) 
நேரம் : மாலை 6 மணி 

          வெற்றி    50%       -    50%   வாய்ப்பு

நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த ஆட்டத்தில் வெற்றி, தோல்வி குறித்து எளிதாக கணிக்க முடி யாது.  2015-ஆம்ஆண்டு உலகக்கோப்பை தொடரின்  இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. நியூஸிலாந்து அணியை இரையாக்கி முதலிட அந்தஸ்துடன் அரையிறுதி வாய்ப்பை பெற ஆஸ்திரேலிய அணி ஆவலு டன் உள்ளது. எப்படியோ இரு அணிகளும் லார்ட்ஸ் போட்டி யில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மனநிலையில் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமில்லை.