tamilnadu

img

ஐபிஎல் 2019 : லுங்கி நிகிடிக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடிக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலெஜினை தனது அணியில் சேர்த்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் அடைந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகினார். 

ஆனால், அவருக்குப் பதிலாக மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்யாமல் இருந்தது. இதை அடுத்து, சொந்த காரணத்திற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லேவும் அணியில் இருந்து விலகினார். 

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் குகெலெஜினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்து, அவரை அணியில் சேர்த்துள்ளது.


;