tamilnadu

img

மார்ஷ் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷேன் மார்ஷ்  வலைப்பயிற்சி யில் ஈடுபட்ட பொழுது வலது கையில் பந்து பலமாகத் தாக்கியது. மருத்துவ அறிக்கையின் படி எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால்  அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஷேன் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய ஏ அணியில் விளையாடி வரும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.  மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கும் ஷேன் மார்ஷ் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாகவும் அதிரடியாக வும் விளையாடக் கூடியவர். இக்கட்டான சூழ்நிலையில் பதற்றமில்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் சிறப்புமிக்க பேட்ஸ்மேனை ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரின் முக்கியமான கட்டத்தில் இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.