tamilnadu

img

ஐபிஎல் 2019 : டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

மொஹாலியில் நேற்று நடந்த 13-வது ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வீழ்த்தியது.

மொஹாலியில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் மில்லர் 43 ரன்களும், சர்பராஸ் கான் 39 ரன்களும் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. மன்தீப் சிங் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதை தொடர்ந்து 167 ரன்களை இலக்காக விளையாடிய டெல்லியின் தொடக்க வீரர்கள் நிதானமாக ரன்களை சேர்த்தனர். பந்த் 39 ரன்களும், ஷிகர் தவான் 30 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் 19.2 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. சாம் கரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.


;