tamilnadu

நிர்மல் பள்ளியின் கல்விப் பணி தொடர உதவிக்கரம் நீட்டுவீர்!

சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தனது அன்றாடப் பணிகளோடு பலதரப்பட்ட இதர சமூக, குடிமைப் பணிகளையும் மேற்கொண்டு கடமையாற்றி வருகிறது.கல்விப் பணி - சென்னை, அயன்புரத்தில் நிர்மல் உயர்நிலைப் பள்ளியை சிஐடியு நடத்துகிறது. அரசு உதவிபெறும் தமிழ்வழிக் கல்விப் பள்ளி இது. மூட இருந்த இந்த பள்ளியை சிஐடியு ஏற்று நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் 96 சதவீத தேர்ச்சியை சாதித்த பள்ளி.இது முற்றிலும் ஏழைக் குழந்தைகள் இலவசமாக பயிலும் பள்ளி. பிள்ளைகளின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க மற்ற தனியார் பள்ளிகளுக்கு இணையாக இலவச சீருடை, ஆங்கில தனி வகுப்புகள், கம்ப்யூட்டர் அறிமுக வகுப்பு, மின்னணு வகுப்புகள் (ஸ்மார்ட் கிளாஸ்), கைவினைத் தொழில்களில் பயிற்சி, கலையார்வம் தூண்டுதல் போன்ற அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது.

முறையான ஆசிரியர்களோடு கல்வியியல் நிபுணர்களும் துணைபுரிகின்றனர். ஆங்கில வழியில் மழலையர் வகுப்பும் தொடங்கப்பட்டுள்ளது.பள்ளியில் மாடித் தோட்டம் அமைக்கப்பட்டு குழந்தைகளே பராமரிக்கிறார்கள். தொடர்ந்து சாகுபடி பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் விளைவிக்கும் கீரை, காய்கறிகள் சத்துணவோடு இணைத்து வழங்கப்படுகிறது. பாரம்பரியக் கலைகள் மற்றும் விளையாட்டுகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.குழந்தைகளின் ஒற்றையறை வீடுகளில் படிப்புச் சூழலே இல்லாத நிலையை எண்ணி பள்ளியிலேயே மாலை சிற்றுண்டி கொடுத்து படிக்க  வைப்பதற்கான ஏற்பாடுகள், தேர்வு நேரங்களில் செய்யப்படுகிறது. மாவட்டங்களில் இரவுப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதனால் பெரும்பலன் விளைகிறது. மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் கல்விப் பணிக்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பயிற்சி வகுப்புகள்- பள்ளிப் படிப்பில் உயர்மதிப்பெண் பெற்று தேறினால் மட்டும்போதாது. உயர்கல்வி மற்றும் அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் கட்டாயமாகிவிட்டது. இது ஏழைக் குழந்தைகளுக்கு பெரும் தீங்காய் விடிந்திருக்கிறது. பெரும்செலவு செய்து தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடிந்தோர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழ் வழிக்கல்வி பயிலும் ஏழைப் பிள்ளைகள், குறிப்பாக கிராமத்துப் பிள்ளைகள் பின்தள்ளப்படுகிறார்கள். எனவே,இந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் சில இடங்களில் சிஐடியு-வினால்  நடத்தப்படுகிறது. இது போதாது, மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பயிற்சி வகுப்புகளையும், தட்டச்சு, கம்ப்யூட்டர்,  ஸ்போக்கன் இங்கிலீஸ் போன்ற பயிற்சிகளையும் வழங்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
இதர பணிகள் - தொழில் வழி நோய் பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகள், ஆரோக்கிய உணவு பற்றிய விளக்கக் குறிப்புகள், தொடக்க நிலை மருத்துவ சோதனைகள்போன்றவற்றை மேற்கொண்டுள்ளோம்.குடிப்பழக்கத்திலிருந்தும், இதர போதைப் பழக்கங்களிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றும் விழிப்புணர்வு பணி நடைபெறுகிறது. நல்ல முறையில் இவற்றை மாநிலம் முழுவதும் விரிவாக்கி செயல்படுத்த பணம் ஒரு தடையாக உள்ளது. எனவே, சிஐடியு தமிழ் மாநிலக்குழுவின் அன்பான வேண்டுகோள்!

உங்கள் வீட்டின் திருமணங்கள், புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைப் பேறு, பதவிஉயர்வு, வேலை பெற்றது, வழக்கில் வெற்றி போன்ற  மகிழ்வான   நிகழ்வுகளில் நமதுமேற்சொன்ன பணிக்காக செலவோடு செலவாக குறைந்தது ரூ.1000 அனுப்பி உதவுங்கள். உங்கள் வீட்டு குடும்பத்தினரின் திருமணநாள், பிறந்தநாள் போன்ற  நினைவுக்கொண்டாட்டங்களின் போது நமது பன்முகப் பணிக்காக குறைந்தது ரூ.500 அனுப்பி தாருங்கள். துக்கத்திலும், ஏக்கத்திலும் இருக்கும் ஏழைப் பிள்ளைகளைக் கைதூக்கிவிட உங்கள் கையை நீட்டுங்கள்! வர்க்க உணர்வைக் காட்டுங்கள் என சிஐடியு தமிழ் மாநில 14வது மாநாடு வேண்டுகிறது.

காசோலை/வரைவோலை - Workers Education Trust
மின்னனு  பண மாற்றம்  - Workers Education Trust
A/c No.475326410  IFSC : IDIB0000M164 
Branch: INDIAN BANK, MLA HOSTEL, CHENNAI - 600 002
 

;