tamilnadu

img

கடலூரில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

கடலூர், ஏப். 27-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வலுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1200 கி.மீ தூரத்தில் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புயல் எச்சரிக்கைக் காரணமாக கடலூர் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டது. சனிக்கிழமைமதியம் 2வது எண் புயல் எச்சரிக்கைக் கூண்டாக உயர்த்திஏற்றப்பட்டது. எனவே, ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் யாரும் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்ல வேண்டாம்என்றும் கடலூர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.புயல் எச்சரிக்கையை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாகவே கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, கடற்கரை பகுதியில் பொதுமக்களை அனுமதிக்காமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

;