tamilnadu

12ம் வகுப்பு முடிந்து 18,374 பேருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் அனுப்ப ஏற்பாடு

கடலூர், ஏப். 27-அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்புதேர்ச்சி பெற்ற 18,374 பேருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்12ம் வகுப்பு தேர்வு எழுதிதேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்திட அரசுஉத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 18,374 பேருக்கு இத்தொகை வழங்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கா.பழனிச்சாமி கூறுகையில், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்திடும் தகவல் மேலாண்மை தொழில்நுட்பத்தின் கீழ்பெறப்பட்டுள்ளன. இப்பணிகள் 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. எனவே, மீதமுள்ள மாணவர்களின் விபரங்களும் பெறப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் சில நாட்களுக்குள் ரூ.5 ஆயிரம் செலுத்தப்படும்” என்றார்.இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1,500, 11ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1,500, 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இத்திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனவே, நடப்பாண்டில் நிலுவைத் தொகையையும் சேர்த்துவழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால்,நடப்பாண்டு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.

;