tamilnadu

img

உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் அடித்தது. 

இதை அடுத்து, 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைப்பற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், 50 ஓவர்களில், 241 ரன்களை அடித்தது. இதனால் போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. 

16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதையடுத்து பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் நியூசிலாந்தை விட இங்கிலாந்து அணி 6 பவுண்டரிகள் கூடுதலாக அடித்திருந்ததால் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டு கோப்பையை கைப்பற்றியது. 

இந்த போட்டியில், இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாகவும், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
 

;