tamilnadu

img

ஒரு லட்சம் முட்டைக்கோஸ் தேக்கம்... ரூ.4-க்கு விற்க தயாராக இருக்கும் விவசாயி

ஈரோடு:
கொரானோ பரவல் காரணமாக விளைவித்த முட்டைகோஸ்களை என்னசெய்வதென தெரியாமல் விவசாயி ஒருவர் தவித்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்தவர் க.கன்னையன். (+919444989543) கர்நாடக மாநில எல்லையில் இவருக்கு விளை நிலம் உள்ளது. முட்டைக்கோஸ் சாகுபடிக்காக ரூபாய் நான்கு லட்சம் செலவிட்டுள்ளார். தற்போது இவரிடம் ஒரு  லட்சம் டன் முட்டைக்கோஸ்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு கிலோ முட்டைக்கோஸை ரூ.4-க்கு விற்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். (வண்டி வாடகை தனி) குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூருக்கு தாமே வந்து சப்ளை செய்வதாகவும் பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள் வாகன ஏற்பாட்டுடன் வரவேண்டுமென்கிறார். 50 ஆயிரத்திற்கு 8 ஆயிரம் கிலோ முட்டைக்கோஸ், ரூ.60 ஆயிரத்திற்கு 10 ஆயிரம் கிலோ முட்டைக்கோஸ்,  ரூ.19 ஆயிரத்திற்கு மூன்று டன் முட்டைக்கோஸ் வழங்கப்படும் என்கிறார். சுமார் 60 ஆயிரம் டன் முட்டைகோஸ்கள் விற்பனையாகாமல் தேங்கி நிற்கிறது.
 

;