tamilnadu

img

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள் அனைத்துக்கட்சியினர் அதிருப்தி

கோபிசெட்டிபாளையம், ஏப்.5-

கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்காமல் அவரவர் வேலைகளைமட்டும் செய்யுங்கள் என கோட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் கூறியதால் அரசியல் கட்சியினர் அதிருப்தியடைந்தனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஈரோடுமாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்றத்தொகுதிகள் உள்ளடக்கியுள்ளது. இந்த பகுதிகளுக்கு கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகன் தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தேர்தல் தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியரும், தேர்தல் அலவலருமானஅசோகன் தலைமையில் வகித்தார். இக்கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, வட்டாட்சியர் விஜயகுமார், காவல் ஆய்வாளர்கள் சோமசுந்தரம், மகாலிங்கம், நிர்மலாதேவி மற்றும் உதவிஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் விஜயகுமார் தேர்தல் நடைமுறைகள் குறித்தும், கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புகுறித்தும் எடுத்துரைத்தார். மேலும் தேர்தல் நாளன்று பூத் ஏஜெண்டுகள் காலை வர வேண்டிய நேரம் குறித்தும், பயிற்சி வகுப்புகள் குறித்தும் அறிவித்தார். தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச்செல்லுதல் திரும்பிக்கொண்டுவருதல் போன்ற நிலைகளில் கட்சியினர்கள் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் ஒத்துழைப்பு தருமாறுகேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து பேசிய கோட்டாட்சியர் அசோகன், நான் இதுவரை பணியாற்றி இடங்களில் அரசியல் கட்சியினரால் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளதாகவும், ஆனால் கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ளஅரசியல் கட்சிநிர்வாகிகள் எவ்விததொந்தரவும் தரவில்லை. இதேபோல் அரசியல் கட்சி நிர்வாகிகள் அவரவர்கள் பணியை மட்டும் பார்த்துக் கொண்டு மற்றவர்கள் மீது குற்றம் சொல்லாமலும் கண்டுகொள்ளாமலும் இருக்கவேண்டும் என பணப்பட்டுவாடாவை கண்டு கொள்ளாதீர்கள் என்று சூசகமாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், கோட்டாட்சியர் தெரிவித்தது போல கட்சியினர், அங்குஅதுநடைபெறுகிறது, இங்குஅதுநடைபெறுகிறதுஎன்று தொல்லை தராமல் தேர்தல் வரை ஒன்றிணைந்து அதிகாரிகளுக்கு தொந்தரவு தராமல் தேர்தல் பணியாற்றவேண்டும் பேசினார். இதனால் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் அதிருப்தியடைந்தனர். மேலும் கூட்டம் முடிந்து வெளியில் வந்த அனைத்துக் கட்சி பிரமுகர்கள் இவர்களேஆளும் கட்சியினருக்குஉதவிசெய்து பணம் பட்டுவாடாவை நல்லமுறையில் நடத்திக்கொடுப்பார்கள் போல் உள்ளது. இந்தமாதிரி அதிகாரிகள் உள்ளபோதுதேர்தல்ஜனநாயகத்துடன் நடைபெறுவதுகடினம் தான். இது போன்ற அதிகாரிகளுக்குதேர்தல் ஆணையம் எதற்காகதேர்தல் பணிவழங்குகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

;