tamilnadu

img

விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு.... செங்கோட்டையன்....

கோபி:
விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக் கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் அருகே உள்ள ஏளுரில் இலவச ஆடு மற்றும் கறவை மாடுகளை பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் செவ்வாயன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதாரத் துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி பள்ளிகள் செயல்படும். எந் தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள் ளது.

மாணவர்களை பாதுகாக்க அனைத்து அறிவுரைகளையும் முதலமைச்சர் கூறி உள்ளார். அதன்படி பள்ளிகள் செயல்படும். இன்றைய சூழ்நிலையில் பொதுத்தேர் தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம். விருப் பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண் ணப்பிக்கலாம். கட்டாய கட்டண வசூல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலைக் காட்சி மூலமாக கற்கும் போது பெற்றோர்கள் கண் காணிக்கலாம். முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்பு திறக்கப் பட உள்ளது. இதற்காக 6029 பள்ளிகள் தயாராக உள்ளது. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்பதை ஆய்வு செய்து திறக்கப்படும் என்றார். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம். மதிய உணவுடன் ஊட்டச் சத்து வழங்குவது குறித்து அரசுக்கு எந்த யோசனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 

;