பிரதமர் மோடி :- நாட்டிற்குத் தேவை வலுவான அரசு.
ச.சா - அஞ்சு வருஷத்துல அதக் குடுத்துருக்கலாமே..??
****************
முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- மக்களை ஏமாற்றி திமுகவால் ஆட்சியைப் பிடித்து விட முடியாது.
ச.சா - உங்களப் பத்தி உண்மையச் சொன்னாலே போதுமே..??
****************
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் :- ஆயுள் முழுவதையும் அதிமுகவுக்கு ஒப்படைத்து விட்டேன்.
ச.சா - அதிமுகவ பாஜககிட்ட ஒப்படைச் சுட்டீங்களே..!!
****************
தமிழக இந்துசமய அறநிலையத்துறை:- மழைக்காக யாகம் நடத்துங்கள்.
ச.சா - அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய அரசு இப்படிச் செய்வது சட்ட விரோதமில்லையா..??