tamilnadu

img

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

 

இந்தோனேசியத் தீவுகளில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 
கிழக்கு இந்தோனேசியாவின் தொலைதூர மாலுகு தீவுகளில் உள்ள மாலுகு மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  மாலுகு மாகாணத்தைச் சேர்ந்த அம்போனுக்கு வடகிழக்கில் 37 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:46 மணிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று  அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.

 

;