tamilnadu

img

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.30,408க்கு விற்பனை

சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (ஜன.13) சற்று குறைந்து காணப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.19 குறைந்து, ரூ.3,801க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.152 குறைந்து, ரூ.30,408க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.20காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 50.400-க்கும் விற்கப்பட்டது. 

;