tamilnadu

img

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் குண்டுவெடித்ததில் ,63 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 182 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 63-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 182 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
 

;