tamilnadu

img

கடந்த 9 வருடங்களில் இந்திய மக்கள் தொகை பெருக்கம் சீனாவை விட இரண்டு மடங்கிற்கு அதிகமாக உயர்ந்துள்ளது - ஐ.நா. அறிக்கை

இந்திய மக்கள்தொகை பெருக்கம் கடந்த 9 வருடங்களில் சீனாவைப்போல் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


நேற்று ஐக்கிய நாடுகள் சபை 2018ம் ஆண்டின் உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் தற்போது உலக மக்கள் தொகை 7.633 பில்லியன் ஆக உள்ளதாகவும், அடுத்த ஆண்டு அது 7.715 பில்லியனாக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் என்பது கடந்த ஆண்டைப்போல 72 வயதாக நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையில் கடந்த 2010 மற்றும் 2019க்கு இடையிலான 9 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை சராசரியாக 1.2 சதவிகிதத்தில் அதிகரித்துள்ளது. இது உலக சராசரி மக்கள் தொகை பெருக்கத்தின் சதவிகிதம் 1.1யை விட 0.1 சதவிகிதம் அதிகமாகும். மேலும், சீனாவுடன்(சராசரி அதிகரிப்பு 0.5%) ஒப்பிடுகையில் இந்திய மக்கள் தொகை பெருக்கம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகமுள்ள இளைய சமுதாயத்தினரால் இந்த பெருக்கம் இன்னும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தின் வேலை வாய்ப்பு மிக மோசமான நிலையில் உள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.


;