வில்லிவாக்கம் தொகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வில்லிவாக்கம் தொகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (நவ.15) பகுதிச்செயலாளர் எம்.ஆர்.மதியழகன் தலைமையில் வட்டாட்சியர் ஜெயந்தியிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, ஜெ.ஏழுமலை, இரா.மணிமேகலை, வி.டில்லிபாபு, ஆர்.ராமு, எம்.முரளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆவடியில் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று (நவ15) பகுதிச்செயலாளர் ராஜன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. குடிமனை பட்டா கேட்டு சுமார் 300 பேர் திரண்ட இந்த போராட்டத்தில் வடசென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பூபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருவிக நகரில் மூன்று தலைமுறைகளாக பட்டா இல்லாதவர்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதிக்குழு செயலாளர் வி.செல்வராஜ் தலைமையில் வெள்ளியன்று (நவ15) பெரம்பூரில் தாசில்தார் அலுவலகத்தில் 200 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த போராட்டத்தில் அ.லோ.மனோகரன், முருகேஷ், பி.கிருஷ்ணன், எம்.சுந்தரமூர்த்தி, எம்.சுப்பிரமணி, ஆர்.சூசைமேரி ஆகியோர் பங்கேற்றனர்.