tamilnadu

திருப்பூர்: ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

திருப்பூர், ஜன. 9- திருப்பூரில் 108 ஆம்புலன்சில் நிறைமாத கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. திருப்பூர்- ஊத்துக்குளி சாலை, பாளையக்காடு, பாறைக் குழி பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய்குமார். இவரது மனைவி உஷா. நிறைமாத கர்ப்பிணியான உஷாவுக்கு வியாழனன்று காலை 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட் டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பூர் பழைய மருத்துவ மனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உஷாவை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென் றனர். ஆனால் சிறிது தூரம் ஆம்புலன்ஸ் சென்றபோது, உஷாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஆம்பு லன்ஸ் டிரைவர் கார்த்திக் வாகனத்தை ஓரமாக நிறுத்தி னார். மருத்துவ உதவியாளர் பாண்டியம்மாள் உஷாவுக்கு பிரசவம் பார்த்தார். இதில் உஷாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.  பின்னர் தாயும், சேயும் தாராபுரம் சாலையிலுள்ள திருப் பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  பிரசவ வலி ஏற்பட்டவுடன் சமயோசிதமாக வாகனத்தை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்திக், மருத்துவ உதவி யாளர் பாண்டியம்மாளை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.