tamilnadu

img

திருநெல்வேலி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி தலைமறைவு!

ராதாபுரம் அருகே காய்கறி பறிக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி செல்வகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது தோட்டத்தில் வெண்டைக்காய்களை பறிக்க அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலரை வேலைக்கு அழைத்துள்ளார் செல்வகுமார். அப்போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஒருவரை தனியாக அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீற முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் செல்வகுமாரிடம் இருந்து தப்பி ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த செல்வகுமார் தலைமறைவானார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் தலைமறைவான பாஜக நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் செல்வகுமாரை தேடி வருகின்றனர்.