கும்பகோணம், அக்.8- மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து வரும் அக். 10 முதல் 16 வரை இடது சாரி கட்சிகளின் சார்பில் நடைபெறும் கண்டன இயக்கத்தை வெற்றிகரமாக பாபநாசம் ஒன்றியத்தில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இடதுசாரி கட்சிகள் சார்பில் சிபிஐ சிபிஎம் கட்சி முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பி.எம்.காதர் உசேன் தலைமை ஏற்றார். பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை கண்டன இயக்கத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், சிபிஐ தில்லைவனம் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். சிபிஎம் உமாபதி இளங்கோவன், கணேசன், சேக் அலாவுதீன், சதா சிவம், விஸ்வநாதன், முரளி, சிபிஐ சார்பில் வீரமோகன் பாலமுருகன், உள்ளிட்ட இடதுசாரி கட்சியினர் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து தொடர் கண்டன இயக்கம் நடத்த உறுதி ஏற்றுக் கொண்டனர்.