உலக குறும்படங்கள் முதல் உள்ளூர் குறும்படங்கள் வரை இலவசமாக பார்க்க ”ஷார்ட்பிலிக்ஸ்” என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சினிமாவுக்குள் நுழைவதற்கான அடையாளமாக குறும்படங்கள் பார்க்கப்படுகின்றன. குறும்படங்களை வெளியுலகத்துக்கு கொண்டு வர "ஷார்ட்பிலிக்ஸ்" என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறும்பட குழுவினர் இந்த செயலியில் தங்கள் படங்களை பதிவேற்றலாம். தகுதி பெறும் படங்கள் செயலியில் வெளியாகும். அந்த படங்களில் சிறந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.