திருச்சிராப்பள்ளி, ஜன.24- தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் திருச்சி மாவட்டக்குழு சார்பில் அனைத்து கட்சி மற்றும் வெகுஜன அமைப்பினர் ஆலோசனை கூட்டம் வியாழனன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநி லக்குழு உறுப்பினர் நந்தலாலா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநகர ஜமாத்துல் உலமாசபை அப்துல் மன்னான், தமுமுக மமக ஜாபர்அலி, சிபிஐ செல்வராஜ், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, புற நகர் மாவட்ட செயலாளர் டிடிசிசேரன், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக அப்துல்ரஹீம், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி(உவைசி) சம்சுதீன், மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு சிரா ஜூதீன், மனிதநேய ஜனநாயக கட்சி மைதீன், இப்ராஹிம்சா, ஐயுஎம்எல் மாவட்ட செய லாளர் ஹபிப் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, என்ஆர்சி, என்சிஆர் ஆகிய வற்றை திரும்பப் பெற வேண்டும் என வலி யுறுத்தி வரும் 30-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், அன்வர்அலி, ஹீமாயூன், திமுக பாண்டி உள்பட பலர் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.