பள்ளிப்பாளையத்தில் கடன் தொல்லையால் வீடியோ வெளியிட்டு நந்தகோபால்(42) என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால்(42) போட்டோ எடிட் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தினேஷ் ஹரி ஆகிய இருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கமாகினர்.சேலத்தில் தினேஷ், ஹரி நடத்தும் ஸ்டுடியோவில் நந்தகோபால் பணிக்கு சேர்ந்துள்ளார்
நந்தகோபாலுக்கு பணத்தேவை ஏற்படவே தினேஷிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்த தினேஷ் பணத்தைக் கேட்டு அடிக்கடி வற்புறுத்தியதாகவும், கிட்னியை விற்று பணம் தர சொன்னதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் வீடியோ வெளியிட்டு நந்தகோபால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது அவர்கள் இருவரும் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
