தரங்கம்பாடி டிச.7- நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் அமைக்கப்படும் மின் விளக்குகள் சமூக விரோதிகள் தொடர்ந்து உடைக்கப்படுவதால் இரவு நேரங்களில் அப்பகுதி முழு வதும் இருண்டு கிடக்கிறது. கோட்டைக்கு எதிரே சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட விலை உயர்ந்த நவீன கோபுர விளக் குகளை சமூக விரோதிகள் முற்றிலும் உடைத்து விட்ட நிலையில் பேரூராட்சி மூலம் நவீன கழிப்பீடம் அருகே அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகளையும் சமூக விரோத கும்பல் உடை த்து நாசமாக்கி விட்டதால் தரங்கம்பாடி கோட்டைப் பகு தியே இருண்டு கிடக்கிறது. இதனால் மாலை நேரங்க ளில் சுற்றுலா வருபவர்கள், நடைபயிற்சி செல்பவர்கள் பெரும் அவதியடைந்து வரு கின்றனர். உடனடியாக தரங் கம்பாடி கடற்கரை, கோட்டை பகுதிகளில் கோபுர விளக்கு களை அமைப்பதோடு, மின் விளக்குகளை சேதப் படுத்தும் சமூக விரோதிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.