பாஜக அரசின் அட்டூழியத்தை கண்டித்து திரிபுராவில் இளைஞர்கள் மாபெரும் பேரணி
அகர்தலா வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, இளைஞர்களிடையே போ தைப்பொருள் பயன்பாடு மற்றும் எச்ஐவி (HIV-AIDS) தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மோசமான நிலைமை யைக் கண்டித்து, இந்திய ஜனநா யக வாலிபர் சங்க (DYFI) திரிபுரா மாநிலக் குழு மற்றும் பழங்குடி யின இளைஞர் கூட்டமைப்பு (TYF) இணைந்து அகர்தலாவில் “தலைமுறையைக் காப்போம்” (Save the Generation) என்ற பெயரில் மாபெரும் கண்டனப் பேர ணியை நடத்தின. நூற்றுக்கணக் கான இளைஞர்கள், மாணவர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள், 2018இல் பாஜக ஆட்சிக்கு வந்ததி லிருந்து மாநிலத்தில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண் டாட்டம் மற்றும் ஜனநாயக உரிமை கள் நசுக்கப்படுவது குறித்த கவலை களையும் எதிர்ப்பையும் வெளிப் படுத்தினர். எச்சரிக்கை இளைஞர்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய நட வடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரும் நாட்களில் போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று வாலிபர் சங்கம், பழங்குடியின இளைஞர் கூட்டமைப்பு அமைப்புக ளின் தலைவர்கள் திரிபுரா பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளனர்.
