tamilnadu

குடும்பத் தலைவியான மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மறுப்பு

குடும்பத் தலைவியான மாற்றுத்திறனாளி  பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மறுப்பு

நியாயம் தானா? - பா.ஜான்சிராணி கேள்வி

சென்னை, பிப். 14- தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை யாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, 1 கோடியே  31 லட்சம் பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருவதை பாராட்டுகிறோம் என்று மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் பா.ஜான்சிராணி தெரிவித்துள்ளார். அதேசமயம், குடும்பத் தலைவியாக உள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தமிழக  அரசின் மகளிர் உரிமைத்தொகை மறுக்கப் படுவது நியாயம் தானா என்று அவர் கேள்வி  எழுப்பியுள்ளார்.  ஏற்கனவே உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற குடும்பத் தலைவியான பெண்களுக்கு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள மகளிருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவது என்பது ஊனமுற்ற பெண்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் தண்டனையாகவே தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உடல் ஊனமுற்ற பெண்களின் வலி களும், வருத்தங்களும், வாழ்நிலையும், எவ்வளவு மோசமான சிக்கலான சூழ்நிலை யில் உள்ளது என்பதை தமிழக அரசு உண ராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊனத்தின்  அடிப்படையில் மாதந்தோறும் ரூபாய் 1500  உதவித்தொகை பெறுவதை காரணம் காட்டி, மகளிர் உதவித்தொகை மறுப்பது  என்பது மாற்றுத்திறனாளி குடும்பத் தலைவி யாக உள்ள பெண்களை மேலும் மேலும் மன  உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். உடல் மனரீதியான குறைபாடு உள்ள  மாற்றுத்திறனாளி பெண்களுக்கு அரசின் ஊக்கமும், ஆக்கமும், ஆதரவும் கிடைப்பதை  அனைத்து வகையிலும் உறுதிப்படுத்த வேண்டிய தமிழக அரசு, ஊனத்தைக் காட்டி,  மகளிர் உரிமை தொகையை மறுப்பது, ஊன முற்ற பெண்களுக்கு தமிழக அரசு தண்டனை  கொடுப்பது நியாயமாகுமா என்பதற்கு தமிழக அரசே பதில் சொல்ல வேண்டும் என்று  பா.ஜான்சிராணி தெரிவித்துள்ளார்.