tamilnadu

தில்லியில் நடந்தது தற்கொலை தாக்குதலா? கார் குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்

தில்லியில் நடந்தது தற்கொலை தாக்குதலா?  கார் குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றம்

புதுதில்லி, நவ. 11 - தில்லியில், பரபரப்பு மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை 6.52 மணி அளவில் வெள்ளை நிற ஹுண்டாய் ஐ-20 கார், மெதுவாக சென்ற நிலை யில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.  இந்த சம்பவத்தில் 13 பேர் உயி ரிழந்துள்ளனர். 16 பேர் படுகாய மடைந்த நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து தில்லி செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செங்கோட்டைக்கும் 3 நாள் விடு முறை விடப்பட்டுள்ளது. முதலில் இதனை குண்டுவெடிப்பு இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்திருந்தார். வெறும் கார் வெடிப்பு என்று சமாளித்தார். ஆனால், தில்லி காவல் துறை,  என்ஐஏ, என்எஸ்ஜி போன்ற அமைப்பு கள் நடத்திய விசாரணையில், வெடித்துச் சிதறிய ஹூண்டாய் காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது கண்டறியப்பட்டதாக தற்போது மோடி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், காரை ஓட்டி வந்தவரின் பெயர் உமர் நபி என்றும், காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான இவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெய்யைக் கொண்டு வெடி விபத்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் உமர்  நபியும் உயிரிழந்ததால், தற்கொலை தாக்குதலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, குண்டு வெடிப்பு வழக்கானது, தில்லி காவல்துறை வசமிருந்து தேசிய புலனாய்வு முகமை (NIA)-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், செவ்வாயன்று உயர் மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கார் குண்டு தாக்குதலின் பின்னணியில் உள்ள ஒவ்வொருவரையும் வேட்டையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வளவு பயங்கர சம்பவம் நடந்தும் பூடானுக்கு பயணம் மேற் கொண்டுள்ள  பிரதமர் மோடி,  “இன்றைக்கு மிக கனத்த இதயத்து டன் இங்கு வந்திருக்கிறேன். இந்த  பயங்கர சம்பவத்திற்கு காரணமான வர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது” என பொங்கியுள்ளார்.