நூறாண்டுகளில் இந்தித் திணிப்பு மூலம்
அழிக்கப்பட்ட 25 வட இந்திய மொழிகள்!
இந்தித் திணிப்பு காரணமாக, கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும், வட இந்திய மாநிலங்களின் 25-க்கும் தாய்மொழிகள் அழிக்கப்பட்டிருப்ப தாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர்பாக திமுக தொண்டர்களு க்கு அக்கட்சித் தலைவரும் முத லமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
இந்தித் திணிப்பை எதிர்ப்பது, எதற்காக?
இதே கேள்வியை அப்போதும் கேட்டனர். இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழி களும் கலந்து திரிபடைந்ததால் உரு வான மொழி. ஆனால், தமிழ் ஆயி ரக்கணக்கான ஆண்டுகள் பழமை யான மொழி. தன்னிலிருந்து திராவிடக் குடும்பத்து மொழிகளைக் கிளைத்திடச் செய்த தாய்மொழி. சிறப்பு மிக்கத் தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத் தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.
மொழி மட்டுமல்ல, பண்பாடு அழியும்
பிறகு எதற்காக அவற்றை நாம் எதிர்க்கிறோம்? அதற்கான காரண த்தை பெரியார் அன்றே சொன் னார். “இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம்” என்று எச்சரித்தார். அண்மையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புகள் குறித்துப் பேசிய போது, “ஒரு மாநி லத்தைக் கைப்பற்ற வேண்டுமென் றால், அதன் கலாச்சாரத்தை கையிலெடுப்பதும், மொழியை அழிப்ப துமே சிறந்த வழி” என்று குறிப்பி ட்டதை மறக்க முடியாது. ஒன்றிய பாஜக அரசின் கொள்கையே அது வாகத்தான் இருக்கிறது.
ஆபத்தை உணராத வட இந்தியர்
இந்தி ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பர விய நிலப்பரப்பெங்கும் காண முடியும். இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைதிலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக் கொழிந்தது. அண்மைக் காலமாகத்தான் மைதிலி மொழி பேசும் மக்கள் மெல்ல விழிப்புணர்வு பெற்று, தாய்மொழியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி யுள்ளனர்.
உ.பி., பீகார் தாய்மொழிகள் எங்கே?
இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். ஆனால், உண்மை அதுவல்ல. வடமேற்கு உத்தரப்பிரதேச மக்களின் மொழி பிரஜ்பாஷா, தென்மேற்கு உத்தர பிரதேசத்தின் தாய்மொழி புந்தேல்கண்டி. வடகிழக்கு உத்தரப்பிரதேசத்தின் சொந்த மொழி போஜ்புரி. மத்திய உத்தரப்பிரதேசத்தின் உள்பகுதிகளில் பேசப்பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்துடன், கண்ணோஜி என்ற மொழியும் இப்பகுதியில் வழக்கில் இருந்தது. இருந்த உத்தரப்பிரதேசத்தில் பிரிக்கப்பட்ட மாநிலமான உத்தரகண்டில் வாழும் மக்களின் பூர்வீகமொழி கடுவாலி மற்றும் குமோனி.
சிதைக்கப்பட்ட மைதிலி, போஜ்புரி
இதுபோன்ற மண்ணின் மைந்த ர்களுடைய மொழிகள் அனைத்தை யும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது. போஜ்புரி, ஆவ்தி போன்ற மொழி கள் பெரும் அவதிகளுக்கிடையே இப்போதுதான் மெல்லத் துளிர்க்கின்றன. இவை மட்டுமா? ஹரியாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசு வோரைத் தேட வேண்டியுள்ளது. பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண் பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத் திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.
25 வட இந்திய மொழிகள்
அழிப்பு வட இந்திய மாநிலங்களில் 25-க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி, சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழி களின் படையெடுப்பு சிதைத்திருக் கிறது. ஆனால், தொடர்ச்சியான போராட்டத்தினால் நம் தாய்த்தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டு பெருமைகள் நிலைநிலைநிறுத்தப்பட்டு இருக்கின் றன. இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஒன் றிய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உணர்ந்திருப்பதால் தான் தமிழ்நாடு எதிர்க்கிறது.” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.