தத்துவார்த்த ரீதியாக தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு எதிராக போராடுவோம்
தத்துவார்த்த ரீதியாக தொழிலா ளர்களை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப் போம் என்று தோழர் இ.பாலானந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஏ.கே.பத்மநாபன் கூறினார். சிஐடியு அகில இந்திய தலைவர் இ.பாலானந்தன் நூற்றாண்டு நிறைவு மற்றும் சிஐடியு செய்தி சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி ஓட்டேரில் சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று (பிப். 25) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன் தலைமை தாங்கினார். பொருளா ளர் வி.குப்புசாமி வரவேற்றார். இதில் கலந்து கொண்டு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் பேசுகையில், புதிய தாராளமயக் கொள்கையோடு தொழிற்சங்க பிரச்ச னைகளை இணைத்து பார்க்க வேண்டும்.
அப்போதுதான் நாம் சந்தி த்துக் கொண்டிருக்கக் கூடிய பிரச்ச னைகளை புரிந்துகொள்ள முடியும். தற்போது தொழிற்சங்கங்களின் மீதே குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கான ஆணி வேரை புரிந்து கொண்டு அதை அழித்தால் மட்டும்தான் அதற்கு தீர்வு காண முடியும். தற்போது தொழிற்சங்கங்கள் சந்தித் துக் கொண்டிருக்கக் கூடிய பிரச்ச னைகளை 1930ஆம் ஆண்டுகளிலேயே ஒரு தொழிலாளியாக தோழர் இ.பாலா னந்தன் சந்தித்தார். கிடைக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்தார். அந்த அனுபவங்கள் ஒரு தொழிலாளி எப்படி சுரண்டப்படுகிறான் என்பதை தொழிலாளர்களுக்கு அவரால் உணர்த்த முடிந்தது. கேரளாவில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த இ.பாலானந்தன் அங்கு தொழிற் சங்கம் அமைத்து, அதன் பொதுச் செயலாளராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலும் சங்கம் அமைக்கக் கூடிய பணிகளை அவர் செய்தார். அதனால் அவர் பணி யில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஒருபுறம் தொழிற்சங்க பணி மறுபுறம் புன்னப்புரா வயலார் போராட்டம் என இரண்டு பணிகளையும் மேற்கொண் டார். பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்து பணியாற்றினார். சுதந்தி ரத்திற்கு முன்பும், பின்பும் கொடூரமாக தாக்கப்பட்டு பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1960-களில் ஏஐடி யுசி எர்ணாகுளம் மாவட்டச் செயலாள ராக செயல்பட்டார். பின்னர் சிஐடியு துவங்கும் போது கேரள மாநிலத்தின் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகியாகவும் செயல்பட்டார். புதிய புதிய சங்கங்களை உருவாக்கு வதிலும், தொழிலாளர்களை ஒற்றுமை ப்படுத்துவதிலும் இ.பாலானந்தன் பங்கு மகத்தானது. மின்சார வாரியத்தில் பிரிவு வாரி யாக சங்கம் அமைத்து தொழிலாளர்கள் பிரிந்து கிடந்த நிலையில், கேரள மின்சார வாரியத்தில் இருக்கக் கூடிய தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி கேரள மின்வாரிய தொழிலாளர் சங்கம் என்ற வலிமைமிக்க அமைப்பை உருவாக்கி னார். 1978ஆம் ஆண்டு 53 நாட்கள் மின்சார வாரியத்தில் வேலை நிறுத்தம் செய்து ஒப்பந்தம் போட்டு வெற்றி கரமாக வேலைக்கு சென்றார்கள். அதை மக்கள் இயக்கமாக மாற்றினார் கள். அதனால்தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது. தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து அகில இந்திய அளவில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியவர் இ.பாலானந்தன். நாடாளு மன்ற உறுப்பினராக, மக்களவை உறு ப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக திறம்பட செயல்பட்டார். அனைத்து மசோ தாக்கள் மீதும் ஆழமான கருத்து களை முன்வைத்தவர்.
தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து 22 அகில இந்திய வேலை நிறுத்தம் நடை பெற்றிருக்கிறது. தற்போது தொழிற்சங்கங்கள் மிக கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கே போராட வேண்டியி ருக்கிறது, நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய புதிய வடிவங்களில் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக் கையில், தொழிலாளர்களின் ஊதியம் உயரவே இல்லை, ஆனால் லாபம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்று ஒன்றிய அரசின் மூத்த பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நிறுவன ங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் பல மடங்கு உயர்கிறது. அந்த லாபத்திற்கு காரணமாக இருக்கக் கூடிய சிறு குறு நிறுவனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. 1991ஆம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்தால் சிறு குறு நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என அம்பத்தூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் ஒரு வரு டத்திற்கு பிறகு, பெறுக்கும் துடைப்பத் தை கூட வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன அதனால் இங்குள்ள நிறுவனங்களுக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கூறினார்.
உற்பத்தியாகும் பொருட்கள் விற்பனையாக வில்லை. ஏனென்றால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து, ஒப்பந்த தொழிலாளர்கள், தினக் கூலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான். தற்போதுள்ள ஒன்றிய அரசு இந்த சுரண்டலை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது, ஊக்கப்படுத்துகிறது. தற்போது மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கும் முயற்சியை ஒன்றிய பாஜக அரசு வேகமாக முன்னெடுத்து வருகிறது. இந்த சூழ் நிலையில் தத்துவார்த்த ரீதியாக தொழிலாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்தி சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
போராட்டம் நடத்த, பேரணி நடத்த, கேட் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்ற நிலையை உடைத்து வீடு வீடாகச் சென்று ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கை களை எடுத்துக் கூறி அணி திரட்ட வேண்டிய மிகப்பெரிய பணியும், இளம் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை பயிற்றுவிக்க வேண்டிய பணியும், இன்று போராடிக் கொண்டி ருக்கும் பெண் தொழிலாளர்களை அடையாளம் கண்டு ஊழியர்க ளாகவும், தலைவர்களாகவும் மாற்ற வேண்டிய பணியும் நம்முன் உள்ளது. இப்படிப்பட்ட கடமைகளை நிறைவேற் றும் வகையில் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஏ.கே.பத்மநாபன் கேட்டுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயரா மன் எதிர்வரும் காலத்தில் முன்னெ டுக்க வேண்டிய பணிகள் குறித்து பேசி னார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை நன்றி கூறினார். முன்னதாக சிஐடியு செய்தி மாத இத ழுக்கான 650 சந்தாவை எஸ்.கே.மகேந் திரன் வழங்க ஏ.கே.பத்மநாபன் பெற்றுக் கொண்டார்.