வயதை வென்ற “மாரத்தான் மகாராஜா”
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம், பியாஸ் பிண்டி என்ற சிறு கிராமத்தில் 1911 ஏப்ரல் 1 அன்று பிறந்த பவுஜா சிங், விளையாட்டு உலகில் “டர்பன் டொர்னாடோ” என்ற அழைக்கப்பட்டார். அவரது வாழ்க்கைக் கதை, வயது என்பது வெறும் எண் தான் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மகன் மரணம் - மாரத்தான் 114 ஆண்டு கால நீண்ட வாழ்க்கை யில் கடைசி 25 ஆண்டுகளில் அவர் சாதித்த சாதனைகள் உலகையே வியக்க வைத்தன. குடும்ப பின்னணி ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த பவுஜா சிங், 5 மகன்களுக்கு தந்தை. இளம் வயதில் அவர் ஒரு கடின உழைப்பாளி யாக இருந்தவர். விவசாயம் மற்றும் பிற உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபட்ட வர். அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய துயரம் 1994 ஆம் ஆண்டு, அவரது 83ஆவது வயதில் நிகழ்ந்தது. ஐந்தாவது மகன் குல்தீப் சிங் மரணமடைந்தார். இந்த பேரிழப்பு பவுஜா சிங்கின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மகனின் மரணத்தால் ஏற்பட்ட மன உளைச்சலை மறக்க மாரத்தான் ஓட்டத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். 89 வயதில் தனது முதல் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். இந்த வயதில் பெரும்பாலான மக்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது, பவுஜா சிங் தனது இரண்டாவது வாழ்க்கையை தொடங்கினார். 2003ஆம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டியில் 6 மணி நேரம் 2 நிமிடங்களில் 42 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 90 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் உலக சாதனை படைத்தார். அவரது மிகப்பெரிய சாத னை 2011ஆம் ஆண்டில், 100ஆவது வயதில் நிகழ்ந்தது. கனடாவின் “டொராண்டோ வாட்டர் பிரண்ட்” மாரத் தான் போட்டியில் 8 மணி நேரம் 11 நிமிடங்கள் 6 வினாடி களில் முழு மாரத்தான் தூரத்தை கடந்து உலகின் முதல் 100 வயது நிரம்பிய மாரத்தான் ஜாம்பவான் என்ற பெருமையை பெற்றார் பவுஜா சிங். துப்பாக்கி சத்தத் துடன் தொடங்கும் ஓட்டத்தில் அவர் தொடக்கக் கோட்டைக் கடக்க 14 நிமி டங்கள் ஆனதால், அதிகாரப்பூர்வ நேரம் 8 மணி நேரம் 25 நிமிடங்கள் 17 வினாடிகளாக பதிவு செய்யப்பட்டது. வரலாறு அக்டோபர் 2011இல் டொரோண்டோ வில் நடந்த ஒரே நாள் போட்டியில் பவுஜா சிங் அசாதாரண சாதனையை நிகழ்த்தினார். 100 மீட்டர் முதல் 5000 மீட்டர் வரையிலான 5 வெவ்வேறு தூரங்களில் தனது வயது பிரிவில் உலக சாதனைகள் படைத்தார். 100 மீட்டர் ஓட்டத்தை 23.14 வினாடிகளில், 200 மீட்டர் ஓட்டத்தை 52.23 வினாடிகளில், 400 மீட்டர் ஓட்டத்தை 2 நிமிடங்கள் 13.48 வினாடிகளில், 800 மீட்டர் ஓட்டத்தை 5 நிமிடங்கள் 32.18 வினாடிகளில்,1,500 மீட்டர் ஓட்டத்தை 11 நிமிடங்கள் 27.81 வினாடிகளில் முடித்தார். இந்த சாதனைகள் மிகவும் சிறப்பானவை ஏனெனில் 100 வயதுக்கு மேற்பட்ட யாரும் இத்தகைய தூரங்களில் ஓட முயற்சித்ததே இல்லை. கெட்ட பழக்கங்கள் இல்லை ஒல்லியான உருவம், மெலிந்த கால்களுடன் 1.72 மீட்டர் உயரமும் 52 கிலோ எடையும் கொண்ட பவுஜா சிங் எளிமையான வாழ்க்கை முறையில் புகைபிடிப்பது, மது அருந்துவதை முற்றிலும் தவிர்த்தார். அவரது உணவு முறையும் சைவ உணவாக இருந்தது. புல்கா (ரொட்டி வகை), பருப்பு, பச்சை காய்கறிகள், தயிர், பால் மட்டுமே அவரது தினசரி உணவில் இருந்தது. பரோட்டா, பக்கோடா, அரிசி அல்லது வறுத்த உணவு களை முற்றிலும் தவிர்த்தார். இஞ்சி தேநீர் மற்றும் நிறைய தண்ணீர் குடிப்பது அவரது வழக்கமாக இருந்துள்ளது. பன்னாட்டு அங்கீகாரம் பவுஜா சிங்கின் சாதனைகள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. 2003 நவம்பர் 13 அன்று அமெரிக்கா வின் ஒரு தேசிய அமைப்பு “எல்லீஸ் தீவு பதக்கம்” வழங்கியது. இந்த கவு ரவத்தைப் பெற்ற முதல் அமெரிக்க ரல்லாத நபர் பவுஜா சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பு அவருக்கு “இந்தியாவின் பெருமை” என்ற பட்டத்தை வழங்கியது. 2012 லண்டன் கோடைகால ஒலிம்பிக் கில் ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லும் மாபெரும் பெருமையை பவுஜா சிங் பெற்றார். 2015 புத்தாண்டு கவுரவ விழா வில் விளையாட்டு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சேவைகளுக்காக “பிரிட்டிஷ் பேரரசு பதக்கம்” வழங்கப் பட்டது. துக்கரமான முடிவு 2025 ஜூலை 15 அன்று 114 வயதில் பஞ்சாபில் உள்ள தனது சொந்த கிராமமான பியாஸ் பிண்டில் சாலையைக் கடக்கும் போது விபத்து ஒன்றில் “மாரத்தான் ஜாம்பவான்” பவுஜா சிங் மறைந்தார். நிரந்தர நினைவுகள் 2013 பிப்ரவரி 24ல் ஹாங்காங் மாரத்தானில் 10 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்கள் 28 வினாடி களில் முடித்த பிறகு போட்டி ஓட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஓய்வு பெற்ற பிறகும் பல மாரத்தான் நிகழ்வு களில் ஊக்கமளிப்பவராக கலந்து கொண்டார். மலேசியாவில் நடைபெற்ற 2ஆவது வருடாந்திர சார்டிகலா ஓட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்வு அவரது நினைவாக ‘101 மற்றும் ஓட்டம்’ என்ற கருப்பொரு ளைக் கொண்டிருந்தது. பவுஜா சிங்கின் வாழ்க்கை வயதை பொருட்படுத்தாமல் சாதிக்க முடியும் என்பதற்கு உலகளாவிய உதாரணமாக திகழ்கிறது. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறாத போதிலும், பிறப்புச் சான்றிதழ் இல்லாததால், அவரது சாதனைகள் மனிதர்களின் மனதில் நிரந்தரமாக பதிந்துள்ளன. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விளையாட்டு உலகில் இளைஞர்களுக்கு உத்வேக மாக விளங்கிய இந்த மாரத்தான் ஜாம்பவானின் வாழ்க்கை கதை எந்த வயதிலும் கனவுகளைத் தொடர முடியும் என்பதற்கு அழியாத சான்றாக நிற்கிறது. “டர்பன் டொர்னாடோ” பவுஜா சிங் என்ற பெயர் விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.