tamilnadu

img

விடுதலைப் போராட்டக் காலத்தில் ‘விடுப்பில்’ இருந்த கும்பல்தான் சங்பரிவார்

விடுதலைப் போராட்டக் காலத்தில் ‘விடுப்பில்’ இருந்த கும்பல்தான் சங்பரிவார்

தஞ்சையில் க.கனகராஜ் கடும் தாக்கு! தஞ்சாவூர், மார்ச் 2 - “இந்திய விடுதலைப் போராட்ட வர லாற்றில் ஒருமுறை கூடப் பங்கேற்காமல் விடுப்பில் இருந்த சங்பரிவார் கும்பல், இன்று போலித் தேசபக்தி பேசி மதக் கல வரங்களைத் தூண்டப் பார்க்கிறது. மைக் கேல்பட்டி மாணவி மரண விவகாரத்தில் பொய்ப் பிரச்சாரம் செய்த அண்ணாமலை உள்ளிட்டோர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு  கேட்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் க.கனகராஜ் சாடினார். தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி மாணவி மரண விவகாரத்தைத் திட்டமிட்டு மதமாற்றப் பிரச்சனையாகத் திரித்து, மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு  ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார். திட்டமிடப்பட்ட சதி முறியடிப்பு கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினரும்  கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பின ருமான எம்.சின்னத்துரை பேசுகையில், “எளிய அடித்தட்டு மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் கல்வியை வழங்கி யது மைக்கேல்பட்டி போன்ற கிறிஸ்தவச்  சிறுபான்மைப் பள்ளிகள் தான். அமைதி யான டெல்டா மாவட்டத்தில் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தை வைத்து மதக் கலவரத்தை உருவாக்கச் சங்பரிவார் அமைப்புகள் ஒரு சதித் திட்டத் தைத் தீட்டின. அப்போதைய பாஜக தலை வர் அண்ணாமலை பேசிய பேச்சுக்கள், அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மீது பொது மக்கள் ஆவேசம் கொண்டு தாக்கும் வகை யில் இருந்தது. ஆனால், அன்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொன்னதோ, அதைத்தான் இன்று சிபிஐ அறிக்கையும் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அந்தப் பள்ளியில் ஒருவர் கூட மதம் மாறவில்லை என சிபிஐ  கூறியுள்ளது. தஞ்சை மக்கள் பக்தியின் பெயரால் சதி செய்பவர்களின் பக்கம் செல்ல மாட்டோம் என்பதில் உறுதியாக நின்ற தால்தான் கலவரம் தடுக்கப்பட்டது” என்றார். மேலும் அவர், “அரசியல் சட்டத்தைப்  பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள் இன்று தனிநபர்களின் பாதுகாவலர்களாக மாறி வருகின்றன. குற்றவாளிகள் தைரிய மாக நடமாடிக் கலவரம் செய்வது தேசத்தின்  அவலம். சட்டங்கள் மடைமாற்றப்படுவதை மக்கள் மன்றம் தான் கேள்வி கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார். வரலாற்று உண்மைகளைத் தோலுரித்த க.கனகராஜ் தொடர்ந்து மாநிலச் செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ் பேசுகையில், “இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு; வேற்றுமையில் ஒற்றுமைதான் இதன் அடிப்படை. ஆனால், பிரிட்டிஷாருக்கு எதி ரான விடுதலைப் போராட்டத்தின் எந்தக்  கட்டத்திலும் கலந்துகொள்ளாத ஒரு கூட்டம் தான் இந்தச் சங்பரிவார் கும்பல். 1940 முதல் 47 வரை தேச விடுதலையின் கொந் தளிப்பான காலகட்டத்தில் விடுப்பில் இருந்த இந்த அமைப்பு, இன்று தேசபக்தி குறித்துப் பேசுவது வேடிக்கையானது. இவர்கள் அதிகாரத்தை அடைய எத்தகைய  பொய்யையும் பரப்புவார்கள் என்பதற்கு மைக்கேல்பட்டி விவகாரமே சாட்சி. அண்டை மாநில முதலமைச்சர் பினராயி  விஜயன் மீது தங்கக் கடத்தல் புகார் கூறி னார்கள்; சிபிஐ, அமலாக்கத்துறை என அனைத்தையும் கையில் வைத்துள்ள அவர் களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு எள்  முனை அளவு ஆதாரத்தைக் கூடக் கொண்டு வர முடியவில்லை” என்று சுட்டிக்காட்டி னார். அண்ணாமலையின் செயல்பாடுகளைச்  சாடிய அவர், “மைக்கேல்பட்டி பள்ளியில் 2010 முதல் படித்த ஒரு மாணவர்கூட மதம்  மாறவில்லை என்பது சிபிஐ விசாரணை யில் தெளிவாகியுள்ளது. காவல்துறை அதி காரியாக இருந்த அண்ணாமலைக்கு இத்த கைய பேச்சுக்கள் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று தெரியாமல் இருந்திருக்காது. குறைந்தபட்ச நேர்மை  இருந்தால் அவர் மன்னிப்பு கேட்டிருக்க  வேண்டும். இவர்களின் நோக்கம் மக்களி டையே பிரிவினையை ஏற்படுத்துவது தான். பாசிசம் என்பது இன்று நீதிமன்றங் களையும் நாடாளுமன்றத்தையும் கபளீ கரம் செய்து தன் விருப்பத்திற்கேற்ப மாற்றி  வைத்திருக்கிறது. இந்த நிலையை மாற்ற மக்கள் அணிதிரள வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச்  செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள்  மற்றும் மாநகர, ஒன்றியச் செயலாளர்கள் உட்படத் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். (ந.நி)