எரிவாயுக் கப்பல் இந்தியா வந்தது காந்தி ந
கர், மார்ச் 16 - 40,000 மெட்ரிக் டன் சமை யல் எரிவாயு ஏற்றி வந்த ‘சிவாலிக்’ (Shivalik) என்ற இந்தியக் கப்பல், திங்கட் கிழமை (மார்ச் 16) மாலை குஜராத்தின் முந்த்ரா துறை முகத்தை வந்தடைந்தது என ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்து வெளியேறிய பிறகு இந்தக் கப்பல் முந்த்ரா துறைமுகத் திற்கு வந்து சேர்ந்தது என கூறிய அவர் 81,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யைச் சுமந்து வரும் ‘ஜக் லாட்கி’ என்ற கப்பலும் பாதுகாப்பாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அன்று முந்த்ரா துறைமுகத்தை வந்தடை யும் என்று எதிர்பார்ப்பதாக வும் தெரிவித்துள்ளார்.