tamilnadu

img

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற பொறையார் த.பே.மா.லு கல்லூரி பேராசிரியர்

மயிலாடுதுறை, செப்.29 -  மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் பணியாற்றும் இயற்பியல் துறை பேராசிரியர் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.                            அமெரிக்காவில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் லொன்லிடிஸ் மற்றும் அவரது குழுவினர் உலகளவில் மிகுந்த தாக்கத்தை ஏற் படுத்தக் கூடிய விஞ்ஞானிகளை அடை யாளம் காணும் பட்டியலை வெளியிட்டுள் ளனர். இந்தப் பட்டியலில் உலகம் முழு வதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிக மான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.  இந்தியாவிலிருந்து 3500-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இந்த பட்டிய லில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, திருச்சி பாரதிதாசன் பல் கலைக் கழகத்திலிருந்து 5 பேராசிரியர் களும்,  பல்கலைக்கழக இணைவு பெற்ற த.பே.மா.லு கல்லூரியில் பணிபுரியும் இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜோதிபாசு 2024 ஆண்டிற்கான பட்டிய லில் இடம் பெற்றுள்ளார்.  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், குமராட்சி பகுதியைச் சேர்ந்த விவ சாய குடும்பத்தை சேர்ந்த மகாராஜன்-சற்குணம் ஆகியோரின் மகன் முனைவர் ஜோதிபாசு. இவரது மனைவி ஷீலா பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பள்ளி படிப்புக்கு பின்னர் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் பயின்ற இவர், 2014 இல் தான் பயின்ற கல்லூரியிலேயே பேராசிரியராக பணிக்கு சேர்ந்து தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர், இதுவரை 105 ஆராய்ச்சி கட்டுரை களை வெளியிட்டுள்ளதோடு, இவரின் 3 கண்டுபிடிப்புகளில் ஒன்றுக்கு காப்புரி மையும், இரண்டு கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கேட்டும் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. 6 ஆராய்ச்சி சம்பந்தமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 75-க்கும் மேற்பட்ட சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ள இவர், 4 சர்வதேச கருத்தரங்கில் கருத்துரையாற்றியுள்ளார். இவரின் 5 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்று பணியாற்றி வருகின்றனர். 7 மாணவர்கள் விரைவில் முனைவர் பட்டம் பெறவுள்ளனர். பல்வேறு விதமான நியூ ஏஜ் நானோ மெட்டீரியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அவைகளில் குறிப்பிடத்தக்க வகையில் சமூகத்திற்கும், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் சாயப்பட்டறை கழிவு களை சிதைக்கும், சூரிய ஒளியின் மூலம் செயல்படும் போட்டோ கேட்டலிசிஸ், இரு  பரிமாணங்களை உள்ளடக்கிய கிராபைட் மற்றும் (MXene) டைட்டானியம் கார்பைடு போன்ற அதிக திறன் வாய்ந்த Nano கலவை பொருட்களின் மூலம் சக்தி சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு போன்ற ஆராய்ச்சிகளில் முனைவர் ஜோதிபாசு ஈடுபட்டு வருகின்றார். அது மட்டுமல்லாமல் பச்சைய முறை மூலம் தயாரிக்கப்படும் Nano வடிவிலான துகள்கள் மூலம் மருத்துவம் சம்பந்தப்பட்ட நீரழிவு எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு போன்ற மக்கள் நலத்தை உள்ளடக்கிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார் முனைவர் ஜோதிபாசு. இந்த சமூகத்திற்கும் மனித வாழ்வுக்கும் பயன் தரக்கூடிய இந்த ஆராய்ச்சி வெளி யீடுகள் பல்வேறு நாடுகளில் உள்ள  ஆராய்ச்சி பத்திரிகைகளில் வெளியிடப் பட்டுள்ளன. மேலும் சர்வதேச ஆராய்ச்சி பத்திரிகைகளில் ஆசிரியராகவும் மதிப் பாய்வாளராகவும் இவர் விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்ந்த முனைவர் ஜோதிபாசுக்கு முதல்வர், அனை த்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.