வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் காராணமாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.60 உயர்த்தியும், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.115 உயர்த்தியும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலால் இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தியுள்ளது ஒன்றிய அரசு.
விஷ்வகுருவின் அமெரிக்க விசுவாசத்துக்கு ஒவ்வொரு இந்தியனும் அபராதம் கட்ட வேண்டும் என்பது என்ன நியாயம்? போர்க் குற்றவாளி அமெரிக்காவையும், போரைக் காரணம் காட்டி விலையேற்றும் பா.ஜ.க அரசையும் கண்டிக்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
