வெள்ளி நகைகளுக்கு கடன் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறை
வெள்ளி நகைகள் மீது கடன் வழங்கும் நடைமுறை வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஒப்புதலை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. மேலும் வெள்ளி மற்றும் தங்க நகைக்கடன் விதி முறைகளையும் ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ளது. வெள்ளி நகைகள் அல்லது நாண யங்கள் மீது மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும் வெள்ளிக் கட்டிகள் மீது வழங் கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. 10 கிலோ வரையிலான வெள்ளி நகைகள், அரை கிலோ வரையிலான வெள்ளி நாணயங்களுக்கு கடன் வழங் கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளுக்கு அதிகபட்சம் 1 கிலோ வரையும், தங்க நாணயங்களுக்கு அதிகபட்சம் 50 கிராம் வரையும் கடன் வழங்கப்படும் எனவும், வெள்ளி நகை களுக்கு அதிகபட்சம் 10 கிலோ வரையும், வெள்ளி நாணயங்களுக்கு அதிகபட்சம் 500 கிராம் வரையும் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் மதிப்பு விகிதத்திற்கான வரம்பு அடகு வைக்கப்படும் ரூ.2.5 லட்சம் வரையிலான பொருட்களுக்கு அதிகபட்சம் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதே போல 2.5 லட்சம் முதல் 5 லட் சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட பொருட்களுக்கு அதிகபட்சம் 80 சதவீதம் வரையும் 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட பொருட்களுக்கு அதிக பட்சம் 75 சதவீதம் வரையிலும் கடன் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.