எலிகளுக்கும் கற்பனை செய்யும் சக்தி உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்கள் போல கொறிக்கும் விலங்குகள் தங்கள் மூளையின் ஒரு பகுதியை அவற்றின் நினைவுகளை வழியறிய மட்டுமே பயன்படுத்துகின்றன. நமக்கு பிடித்த ஒரு திருவிழாவை கொண்டாடுவதானாலும் வீட்டில் உள்ள இருக்கைகளை எவ்வாறு மாற்றியமைப்பது என்று சிந்திப்பதாக இருந்தாலும் மனிதர்கள் அவர்களுக்கு முன் உண்மையாக நிகழாத எந்த ஒரு உடனடி தீர்வையும் தராத எண்ணற்ற பிரச்சனைகளை கற்பனை செய்கின்றனர்.
கற்பனை செய்யும் எலிகள்
இப்போது எலிகளும் இது போல சில செயல்களை செய் கின்றன. முன்பொரு சமயம் சென்ற பாதையை வழியறிந்து செல்ல எலி களால் முடியும் என்று ஆய்வா ளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நினைவுகளை மட்டுமே பயன் படுத்தி அவற்றால் கற்பனை செய்ய முடியும். செய்கின்றன. மனிதர்கள் போல மூளையை நெகிழ்வுடன் செயல்பட வைத்து இப்போது உள்ள பகுதிகளில் இருந்து தொலைவில் இருக்கும் இடங்களை பிரதிநிதித்துவப்படுத் தும் ஆற்றல் விலங்குகளுக்கும் உண்டு என்பதை இந்த ஆய்வு முதல்முறையாக நிரூபித்துள்ளது” என்று ஹவர்டு ஹ்யூஸ் (Howard Hughes) மருத்துவக் கழ கத்தின் ஜெனிலியா (Janelia) ஆய்வு வளாக ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆசிரி யருமான சாங்சி லை (Chongxi Lai) கூறுகிறார். இது குறிப்பிட்ட விதத்தில் கற் பனை செய்யும் திறனின் அடிப்படை களில் ஒன்று. சில சந்தர்ப்பங்களில் கடந்தகாலத்தின் அல்லது வருங்காலத் தின் காட்சிகளை காண இது நமக்கு உதவுகிறது. சயன்ஸ் (Science) என்ற ஆய்விதழில் இது பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளிவந்துள்ளது. மூளையின் ஹிப்போகாம்பஸ் (hippo campus) பகுதி முன்பு நாம் அறிந்த சூழ்நிலையின் ஒருவகை மனரீதி யிலான மாதிரி அல்லது வரை படத்தை பெற்றுள்ளது. இது முன்பு நாம் அனுபவித்ததை சித்தரிக்கிறது. ஒரு சூழ்நிலையில் ஒரு தனிநபர் அங்கிருந்து நகர்ந்து சென்றார் என்றாலும் முன்பு சென்று பார்த்துவிட்டு வந்த இடங்களின் வழியை அறிந்துகொள்ள அவரால் கற்பனை செய்ய முடியும். அப் போது சில குறிப்பிட்ட நியூரான்கள் சுறுசுறுப்புடன் மனித மூளையில் இயங்கத் தொடங்குகின்றன. வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பெருவழியை நாம் நினைவில் வைத்துக்கொள்வது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
எலிகளின் மூளையில் நரம்பியல் ஆய்வுகள்
எலிகளும் இது போல செய்கின் றனவா, இதற்காக குறிப்பிட்ட செயல்முறையை பின்பற்றுகின்ற னவா என்பதை அறிய விஞ்ஞானி கள் அறுவைசிகிச்சை செய்து அவற்றின் மூளையில் மின் தண்டு களைப் பொருத்தி ஆராய்ந்தனர். இதற்காக மூளை கணினி இடை முகம் (brain-machine interface) என்ற அமைப்பை நிறுவினர். இது கணினி அடிப்படையிலான அமைப்பு. மூளை சமிஞ்ஞை களைப் பெறும் இது அவற்றை பகுப்பாய்வு செய்து விரும்பிய செயலை செய்ய வெளியீட்டு சாத னத்திற்கு அனுப்பப்படும் கட்ட ளைகளாக மொழிபெயர்க்கிறது. பிறகு அவை 360 டிகிரியில் கணினியால் உருவாக்கப்பட்ட உரு வங்களை மெய்யுருவம் போல காட்டும் மெய்நிகர் உண்மை அரங்க வசதியை உடைய (within a 360- degree immersive virtual reality (VR) arena) அமைப்பு ஓடு பொறி பந்து இயந்திரத்தில் (Treadmill ball) விடப்பட்டன. செக்குருளை என்றும் அழைக்கப்படும் ஓடு பொறி என்பது உடற்பயிற்சி செய்ய உதவும் ஒரு இயந்திரம். இதில் இருக்கும் வளைந்த பட்டை யின் வழியாக மனிதர்கள், விலங்கு கள் நடந்து அல்லது படிகள் ஏறி உடற்பயிற்சியில் ஈடுபடலாம். இதன் மூலம் எலிகள் ஒரு குறிப் பிட்ட இலட்சியத்திற்காக ஒரு இலக்கை நோக்கி ஓட உதவும் ஒரு திரை வசதியும் (On screen) ஏற்படுத்தப்பட்டது. எலிகள் நகர்ந்த வுடன் ஓடு பொறி இயந்திரத்தில் இருக்கும் பந்துகள் சுழல ஆரம் பித்தன. உண்மை மெய்நிகர் அரங்கின் உதவியுடன் எலிகள் இருக்க விரும்பும் இடம் பற்றிய விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதே சமயம் அவை இருந்த உண்மையான சூழ்நிலையும் தெரிந்துகொள்ளப்பட்டது. இதன் மூலம் எலிகளின் மூளையில் நிகழ்ந்து கொண்டிருந்த எண்ண ஓட்டங்கள் மற்றும் அதை அவை செயல்படுத்த செய்யும் முயற்சி கள் கண்டறியப்பட்டன. தங்கள் இலக்கை அடைந்தபோது அதற்கு ரிய பரிசை அவை பெற்றன. பிறகு அந்த இலக்கு மெய்நிகர் அரங்கு அமைப்பிற்குள் நகர்த்தப்பட்டது. இந்த செயல்முறை திரும்பத் திரும்ப செய்யப்பட்டது.
மெய்நிகர் ஆய்வுகள்
இந்த ஆரம்பநிலையில் ஆய்வுக்குழுவினர் எலிகளின் ஹிப்போகாம்பஸ் பகுதிக்குள் நடப்பவற்றை பதிவு செய்தனர். பிறகு ஆய்வாளர்கள் ஒரு கணினி அமைப்பைப் பயன்படுத்தி இந்த நரம்பியல் செயல்பாடுகளை மெய் நிகர் சூழலுக்கு மொழிமாற்றம் செய்தனர். அடுத்த நிலையில் ஆய்வாளர்கள் ஓடு பொறி வசதியை மெய்நிகர் செயல்முறை யில் இருந்து அகற்றினர். இதனால் எலிகள் ஓடு பொறியைப் பயன் படுத்தி இலக்கை நோக்கி ஓடமுடி யாமல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அவை தங்கள் மூளை நரம்பியல் செயல்பாடு களை பயன்படுத்தி மட்டுமே மெய் நிகர் சூழலில் இலக்கி இருக்கும் இடத்தை வழியறிந்து செல்ல வேண்டும். மெய்நிகர் நேரத்தில் எலிகளின் ஹிப்போகாம்பஸ் பகுதி யில் நடக்கும் மூளை செயல்பாடு களை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். அவற்றின் மூளையில் என்ன நடக்கிறது என்பதன் அடிப்படை யில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. எலிகள் மெய்நிகர் சூழலில் அந்த சமயத்தில் இருந்த இடத்தை திரையை மேம்படுத்தி ஒவ்வொரு 100 மில்லி விநாடிகளுக்கு ஒரு முறை ஆய்வுக்குழுவினர் பதிவேற் றம் செய்தனர். உண்மையில் எலி கள் தங்கள் மூளை செயல்பாடு களை பயன்படுத்தி மட்டுமெ இலக்கு இருக்கும் வழியை அறிந்து செயல்படமுடியும் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டின. நிஜ வாழ்வின் காட்சிகளும் மெய்நிகர் காட்சிகளும் இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஆய்வில் அந்த விலங்கு கள் ஒரே இடத்தில் நிலையாக இருக்குமாறு செய்யப்பட்டு அவற்றின் மூளை செயல்பாடுகளை மட்டும் பயன்படுத்தி மெய்நிகர் சூழ லில் திரையில் இருக்கும் ஒரு பொருளை நோக்கி செல்ல தூண் டப்பட்டது. இந்த பரிசோதனை யிலும் எலிகள் வெற்றிகரமாக இலக்கை அடைந்தன. “மூளையில் ஹிப்போகேம்பஸ் பகுதியின் நரம்பியல் செயல்களு டன் கற்பனை மற்றும் நினைவு தொடர்பு கொண்டுள்ளது என்று கரு தப்படுகிறது. இது போலவே எலி களில் நிகழ்கிறது. இது எலிகளுக் கும் கற்பனை செய்யும் திறன் உண்டு என்பதை உறுதிப்படுத்து கிறது” என்று ஹவர்டு ஹியூஸ் மருத்துவக் கழகத்தின் ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் பேராசிரியர் டிம் ஹேரிஸ் (Prof Tim Harris) கூறுகிறார். உலகில் எல்லா உயிரினங்க ளும் அவற்றிற்குரிய அறிவுத்திற னுடனேயே இயற்கையால் படைக் கப்பட்டுள்ளன என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.