tamilnadu

img

ஆர். சச்சிதானந்தம் எம்.பி., காரை மறித்து சாணார்பட்டி போலீசார் தகராறு

ஆர். சச்சிதானந்தம் எம்.பி., காரை மறித்து சாணார்பட்டி போலீசார் தகராறு

மாதர் சங்கத் தலைவரை வீட்டுக்காவ லில் வைத்த சாணார்பட்டி போலீசாருக்கு திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கண்டனம் தெரிவித்துள் ளார். மேலும், மாதர் சங்கத்தலைவரை அழைத்துச் செல்லும் போது சச்சிதானந்தம் எம்.பி.யின் காரை மறித்து சாணார்பட்டி போலீசார் ரகளையில் ஈடுபட்ட சம்பவமும் நடந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிப்ரவரி 28 அன்று சென்னையில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பேரணி நடைபெறுகிறது. இந்நிலை யில் பேரணியை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் மாதர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாப்பாத்தியை சாணார்பட்டி மேட்டுக்கடையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற சாணார்பட்டி போலீ சார் காவல்நிலையத்திற்கு அழைத்தனர். போலீசாரின் நடவடிக்கை பாப்பாத்தி காவல்நிலையத்திற்கு வர மறுத்ததால், சாணார்பட்டி போலீ சார் அவரை வீட்டுக்காவலில் சிறை வைத்த னர். சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், முனியம்மாள், காவலர்கள் சுப்பிரமணி,பிரான்சிஸ் ஜான் செபாஸ்டின் உள்ளிட்டோர் வீட்டுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு பாப்பாத்தியை, பேர ணிக்கான தயாரிப்பு பணிக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். எம்.பி. தலையீடு இதுதொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்ற ஆர். சச்சிதானந்தம் எம்.பி., மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப்பை தொடர்பு கொண்டு கேட்ட போது, “அப்படி எல்லாம் கைது செய்யவில்லை” என்று தெரி வித்துள்ளார். சென்னை பேரணிக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், ஒரு பெண்ணை, அதுவும் மாதர் சங்கத்தின் தலைவரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன்? என்று எம்.பி. கேட்ட போது, பிரதீப் எஸ்.பி. “நான் விசாரிக்கிறேன்” என்று கூறி போனை துண்டித்துவிட்டார். நேரில் சென்ற எம்.பி. இதனையடுத்து ஆர். சச்சிதானந்தம் எம்.பி., மேட்டுக்கடையில் உள்ள பாப்பாத்தியின் வீட்டுக்குச் சென்றார். அவருடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், ஒன்றியச் செயலாளர் வெள்ளைக்கண்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். போலீசார் அராஜகம் அங்குள்ள போலீசாரிடம் ஒன்றியச் செயலாளர் வெள்ளைக்கண்ணன் மற்றும் மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன் ஆகியோர் நியாயம் கேட்டனர். “இவர் என்ன கொலைக் குற்றமா செய்தார். பேரணிக்கான வேலை யை செய்ய விடாமல் தடுப்பது வன்மையான கண்டனத்து க்குரியது” என்று போலீசாரிடம் பேசினர். ஆனால் போலீசாரோ “இப்போதைக்கு பாப்பாத்தியை விடுவிக்க முடியாது” என்று மிகவும் ஆணவமாக பேசினர். கார் மறிப்பு சம்பவம் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தலையீட்டால் பாப்பாத்தி வெளியேற முடிந்தது. ஆனால் பெண் போலீசார் அவரது கையை பிடித்து முறுக்கி இழுத்தனர். பின்னர் பாப்பாத்தி, சச்சிதானந்தம் எம்.பி.யின் காரில் அமர்ந்து கொண்டார். கார் புறப்படும் போது எம்.பி.யின் காரை சாணார்பட்டி போலீசார் மறித்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். காரை விட்டு இறங்கிய சச்சிதானந்தம் எம்.பி., காரை மறித்த காவலர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். கடும் கண்டனம் ஒரு எம்.பி. என்றும் பாராமல் சாணார்பட்டி போலீசார் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.