tamilnadu

img

12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன - அமோனைட்ஸ் படிமங்கள் பகுதியில் பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர், ஜூலை 19 - தலைக்காலி எனும் வகையினைச் சேர்ந்த அமோ னைட்ஸ்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன. இந்த கடல்சார் உயிரினங்களின் படிமங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொள க்காநத்தம், பிலிமிசை உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. இந்த கடல் வாழ் உயிரினமான அமோ னைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் குறித்து பெரம்பலூர் மாவட் டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை ஊராட்சியில் மாவட்ட ஆட்சி யர் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரலாற்று ஆராய்ச்சியா ளர்கள், புவியியல் ஆராய்ச் சியாளர்கள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள், பொது மக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக தொலைநோக்கி கருவிகள், அமோனைட்ஸ் குறித்த தகவல் குறிப்புகள், அடிப்படை வசதிகள் உள் ளிட்டவற்றை இப்பகுதியில் ஏற்படுத்திட பொதுப் பணித் துறை செயற்பொறியாள ருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் சிறப்பு வாய்ந்த இப்பகுதி யில் போதிய பாதுகாப்பு வசதிகளையும், பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள கனிமவளத் துறை அலு வலருக்கு அறிவுறுத்தினார். 

பெரம்பலூரில் அருங்காட்சியகம்

பெரம்பலூர் வட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில், சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகை யில், பெரம்பலூரில் கண்டெ டுக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்களை பொதுமக்க ளுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத் தில் 112 வகையான தொல்லு யிர் எச்சங்கள் கிடைக்கின் றன. அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொது மக்கள் அறிந்துகொள்ள ஏது வாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி, மாவட் டத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்து கிடைக்கப் பெற்ற 300 வகையான தொல்லுயிர் எச்சங்கள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. தமிழக அளவில் அமோனைட்ஸ்களுக்கு என்று பிரத்யேக அருங் காட்சியகம் அமைக்கப் பட்டது இதுவே முதன் முறை யாகும் என்பது குறிப்பிடத் தக்கது.