பாண்டியர் காலத்து சிவலிங்கம் - கல்வெட்டு கண்டெடுப்பு
மதுரை,ஜூலை 19- மதுரை மாவட்டம் மேலூர் அருகே செம்மணி பட்டியில் பழமை வாய்ந்த ஶ்ரீ ஆண்டிபாலகர் திருக்கோ வில் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக அப்பகுதி முழுவதும் விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சுத்தப்படுத்தும் பணியை செய்தனர். அப்போது “லிங்க மேடு” என்ற கரு வேல மரங்கள் நிறைந்த பகுதியை சுத்தப்படுத்தும் போது, பாதி மண்ணில் புதைந்த நிலையில், கல் லால் ஆன ஆவுடையாருடன் கூடிய அழகிய சிவலிங் கம் ஒன்றும், அருகில் முழு வதுமாக புதையுண்ட நிலை யில் கல்வெட்டு மற்றும் கல்லினால் செய்யப்பட்ட மாட விளக்கும் கண்டெடுக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், இங்குள்ள ஆண்டிபாலகர் திருக்கோவில் பழமை வாய்ந்தது. திருக்கோவில் ராஜகோபுரம் நேர் எதிரே லிங்க மேடு என்ற பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டியர் காலத்து சிவலிங்கமாக கருதப்படும் கல்லால் ஆன சிவலிங்கம் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது மிகவும் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இதன் அருகிலேயே முழுவதுமாக புதையுண்ட நிலையில் கல்வெட்டு ஒன்றும் கண்டெ டுக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவித் தோம். அவர்கள் பார்வை யிட்டு சென்றுள்ளனர். இந்த கிராமத்தின் அருகே உள்ள கொங்கம் பட்டி, இ.மலம்பட்டி மற்றும் கல்லங்காடு ஆகிய பகுதிக ளில் ஆயிரம் ஆண்டுகளு க்கு முந்தைய பாண்டியர் காலத்து சிவன் கோவில்கள் மற்றும் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப் பகுதியிலும் இந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் மற்றும் கல்வெட்டுக்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து சிலையின் பழமை மற்றும் தமிழர்களின் வரலாறு குறித்து அறியும் வண்ணம் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத் தினர்.