tamilnadu

 இந்தியாவை  குற்றம்சாட்டிய பாகிஸ்தான்

 இந்தியாவை  குற்றம்சாட்டிய பாகிஸ்தான்

வெளியுறவுத்துறை நிராகரிப்பு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கார் வெடி குண்டு வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இந்தியாவின் சதி இருப்பதாக அந் நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் குற்  றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கூறிய கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள் ளது. பாகிஸ்தானுக்குள் நடந்து கொண்டி ருக்கும் அரசியல் அமைப்பு சீர்குலைவு மற்றும் அதிகார அபகரிப்பில் இருந்து சொந்த மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்தியாவிற்கு எதிராக  கருத்துக்களை பாகிஸ்தான் உருவாக்கு வதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தா னுக்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்த சில நாட்களுக்குள் இந்த  தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.